Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓ.என்.ஜி.சியில் வேலை வாய்ப்பு

ஓ.என்.ஜி.சியில் வேலை வாய்ப்பு
, செவ்வாய், 20 அக்டோபர் 2015 (18:40 IST)
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: உதவி தொழில்நுட்ப வல்லுநர் - 36, பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் - 03,  வாகன ஓட்டுநர் - 44, தீயணைப்பு வீரர் - 15
 
தகுதிகள்: உதவி தொழில்நுட்ப வல்லுநர், பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர்  ஆகிய பணிகளுக்குப் பொறியியலில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பிலும், வாகன ஓட்டுநர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு 30க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது
 
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.300, இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நாள்: 20.10.2015
 

Share this Story:

Follow Webdunia tamil