Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரோவில்10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓட்டுனர் பணி

இஸ்ரோவில்10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓட்டுனர் பணி
, செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (12:09 IST)
விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் தற்போது ஓட்டுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் உள்ள 112 காலியிடங்களில், இலகுரக வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு(light vehicle) 69 இடங்களும், கனரக வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு(heavy vehicle) 40 இடங்களும், பணியாளர்கள் வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு 3 இடங்களும் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவ சான்று அவசியம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 வயதும், ஓ.பி.சி. விண்ணப்பதாரர் 38 வயதும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 24ஆம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil