Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதவி வேளாண் அலுவலர் பணிக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

Advertiesment
உதவி வேளாண் அலுவலர்
, புதன், 21 அக்டோபர் 2015 (19:48 IST)
உதவி வேளாண் அலுவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப  எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 795 மாணவர்களுக்கு  நவம்பர் 2 முதல் 7 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரலில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 3,236 பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 795 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் விவரங்கள் w‌w‌w.‌t‌n‌p‌sc.‌g‌o‌v.‌i‌n ​என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்கணல்  நவம்பர் 2 முதல் 7 ஆம் தேதி வரை  நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil