2881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு
, வெள்ளி, 10 மே 2013 (15:39 IST)
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல பாடப்பிரிவுகளுக்கான முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.2881
காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு ஜுலை 21 ஆம் தேதி நடக்கிறது. விண்ணப்ப வினியோகம் 31 ஆம் தேதி தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜுன் 14 ஆம் தேதி சமர்பிக்கப்பட வேண்டும். காலி பணி இடங்களில் அதிகமாக இருப்பது தமிழ் பாடப்பிரிவுதான். மொத்தம் 605 இடங்கள் உள்ளன.ஆங்கிலம் 347, கணிதம் 288, இயற்பியல் 228, வேதியியல் 220, தாவரவியல் 193, விலங்கியல் 181, வரலாறு 173, புவியியல் 21, பொருளியல் 257, வணிகவியல் 300, அரசியல் அறிவியல் 1, ஹோம் சயின்ஸ் 1, உடற்கல்வி இயக்குனர் நிலை 1௧7, மைக்ரோபயாலஜி 31, பயோகெமிஸ்டரி 16, தெலுங்கு 2 என்று மொத்தம் 2881 காலி இடங்கள் உள்ளன.தேர்வுக்கான விண்ணப்பம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்படும், விண்ணப்ப கட்டணம் ரூ.50. ஜுலை 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும். 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் பெற www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.