இந்தியர்கள் மீது ஆஸ்ட்ரேலியாவில் நடந்த தாக்குதல்கள் பெரும் பிரச்சனையாக உள்ள நிலையிலும், திறன் பணியாளர்கள் விசாவில் இந்த ஆண்டில் 20,105 இந்தியர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
திறன் பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவின் கீழ் 2008-09ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் இருந்து 13,927 பேர் ஆஸ்ட்ரேலியா சென்றுள்ளனர். அவர்களை விட ஒன்றரை மடங்கு இந்தியர்கள் இந்த விசாவின் கீழ் ஆஸ்ட்ரேலியா சென்றுள்ளனர் என்று அயல்நாட்டுப் பணியாளர்கள் தொடர்பான அந்நாட்டு அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவை விட இங்கிலாந்தில் இருந்து மிக அதிகமானவர் அங்கு பணிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களின் கணக்கு 23,178 ஆகும்.
இந்தியர்களில் மிக அதிகமானோர் (6,238) சென்றிருப்பது கணக்காளர் பணியாகும். கணினி துறையில் 3,879 பேரும், செவிலியர் பணிக்கு 3,355 பேரும் சென்றுள்ளனர்.