அமெரிக்காவிற்கு சென்று பணி புரிவோருக்கு வழங்கப்படும் ஹெச் 1பி விசா பெறுவதற்கு இருந்த போட்டிகள் குறைந்து, இந்த நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டில் இன்னமும் 11 ஆயிரம் விசாக்கள் இருந்தும் பெறுவதற்கு ஆளில்லாத நிலை உள்ளதென அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அயல் நாட்டில் இருந்து அமெரிக்காவில் பணி புரிய வரும் தொழில்நுட்ப நெறிஞர்களுக்கு 65,000 ஹெச் 1பி விசாக்கள் அளிக்கப்படும். கடந்த நிதியாண்டில் இந்த விசாக்கள் அனைத்தும் டிசம்பர் 21ஆம் தேதியுடனேயே முடிந்துபோனது. ஆனால் இந்த ஆண்டில் 11 ஆயிரம் விசாக்கள் வாங்க ஆளில்லாமல் அப்படியே உள்ளதென்ன அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை (US Citizenship and Immigration Services - USCIS) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவையில் இருந்து அது இன்னமும் மீட்சி பெறவில்லை என்பதையே அதன் வேலை வாய்ப்பின்மை குறிப்பதாக கூறப்படுகிறது.