Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1,300 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலி

Advertiesment
1,300 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலி
, புதன், 9 மார்ச் 2011 (18:38 IST)
இந்திய காவல் பணியில் நாடு முழுவதும் 1,327 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட வினாவிற்கு இன்று பதிலளித்த மத்திய அரசு ஊழியர்கள், பொது குறைத் தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் வி.நாராயணசாமி இத்தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி கணக்குப்படி இந்திய காவல் பணியில் இந்த அளவிற்கு பணியிடங்கள் காலியாக உள்ளது என்று கூறியுள்ள அமைச்சர் நாராயணசாமி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயலுறவுப் பணி ஆகியவற்றில் இந்த ஆண்டின் தொடக்கத்திலுள்ள காலி இடங்கள் எண்ணிக்கை விவரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், 2010ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி விவரப்படி, இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐஏஎஸ்) 1,155 இடங்களும், இந்திய அயலுறவுப் பணிக்கு 386 இடங்களும் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி.எஸ்.சில் 630 காலியிடங்கள் இருந்தன். அது இந்த ஆண்டு 1.327 இடங்களாக அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர் நாராயணசாமி, “ஐஏஎஸ், ஐபிஎஸ் இடங்களை நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக உயர்த்தும் திட்டமேதும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தற்போது நாடு முழுவதிற்குமான ஐபிஎஸ் பணியாளர்களின் எண்ணிக்கை 4,720 ஆகவும், ஐஏஎஸ் எண்ணிக்கை (2010 கணக்குக்குப்படி) 4,013 ஆகவும் உள்ளது எனவும் நாராயணசாமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil