மும்பை : இன்னும் ஒரு ஆண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கிராண்ட் திராண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கிரான்ட் திரான்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள 44 சதவீத வர்த்தக நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 16 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஆட்குறைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 சதவீத வர்த்தக நிறுவனங்கள் இந்த ஆண்டில் சம்பள உயர்வை அளிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளன. 3 சதவீத நிறுவனங்கள் மட்டும் சலுகைகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.