மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 44000 காலி பணியிடங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது.
இது குறித்து இன்று ராஜ்யசபாவில், 77,998 காலியிடங்கள் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ந் தேதி வரை 33786 காலியிடங்கள் மட்டுமே பூர்த்தியானதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.