Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தரவரிசையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப‌க் கல்லூரி முதலிடம்

Advertiesment
தரவரிசையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப‌க் கல்லூரி முதலிடம்
, சனி, 10 அக்டோபர் 2009 (19:15 IST)
அண்ணா பல்கலைகழக தரவரிசையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப‌க் கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் இயங்கி வந்த பொறியியல் கல்லூரிகள் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இவற்றில் கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஆகிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 6 முதல் 10 பகுதிக்குள் அமைகின்றன.

இந்த கல்லூரி மாணவர்க‌‌ளி‌ன் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு தேர்வு முடிவுகளை பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. இந்த ஐந்து பகுதிகளுக்குள் மொத்தம் 135 பொறியியல் கல்லூரிகள் இடம் பெறுள்ளது. இதில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப‌க் கல்லூரி 95.66% மாணவ, மாணவிகள் தேர்ச்சியுட‌ன் முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த‌க் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் தங்கபதக்கம் உட்பட 33 பேர் வெற்றி நிலை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட 243 கல்லூரிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப‌க் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் மற்றும் முதல்வர் டாக்டர் ஏ.சண்முகம், முதன்மை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஏ.எம்.நடராஜன் மற்றும் பேராசிரியர்களை கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் மற்றும் கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil