Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கப்பல் துறையில் பணிபுரிய 2 லட்சம் பேர் தேவை

Advertiesment
கப்பல் துறையில் பணிபுரிய 2 லட்சம் பேர் தேவை
, திங்கள், 29 மார்ச் 2010 (21:10 IST)
கப்பல் துறையில் பணியாற்ற அடுத்த ஐந்தாண்டுகளில் 1,98,000 பேர் தேவைப்படுவதாக தேசிய கடல்சார் விழா குழுவின் உறுப்பினர் கேப்டன் கே விவகானந்தன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இன்று இவ்விழா குழுவினர் செய்தியாளர்களிடம் இ‌வ்வாறு தெரிவித்தன‌ர்.

உலகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல் இருப்பதாகவும் இவற்றில் பணிபுரிய தற்போது பணியாளர்களு‌க்கு பற்றாக்குறை உள்ளது என்றார். இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இத்துறையில் பணியாற்ற தயங்குகின்றனர் என்றும், இந்தியாவை பொறுத்த வரையில் இந்த துறையில் பணிபுரிய கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். உலகளவில் உள்ள கப்பல் துறை நிர்வாகம் மற்றும் கப்பல்களில் பணிபுரிய இந்தியர்களையே விரும்புகிறார்கள். அதற்கு நம்மிடைய உள்ள ஆங்கில புலமைதான் காரணம் என்று கேப்டன் விவகானந்தன் தெரிவித்தார்.

உலக அளவில் இன்று கப்பல் துறையில் பயிற்சியின் போது மாதம் ஒன்றுக்கு 300 முதல் 500 டாலர் வரையிலும் பயிற்சி முடித்த பின் பொறியாளர்களுக்கு 2000 டாலரும், கேப்டன் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு 8000 டாலர் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. கப்பலில் பணிபுரிகின்றவர்களை சர்வதேச கடல்சார் அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சட்டத்தின் மூலம் பாதுகாக்கிறது என்று கேப்டன் விவகானந்தன் தெரிவித்தார்.

இந்த துறையில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி அதாவது 10-ம் வகுப்பு என்றும், ஆங்கிலத்தில் 40 சதவீதமும் மொத்தத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாலே தகுதியுடைவர்களாவர். ஆறு மாத படிப்பிற்கு பின் நேரடியாக மாலுமியாக பணியில் சேரலாம். அதிகாரிகளுக்கான கல்வியில் சேர குறைந்தபட்ச கல்வி தகுதி +2 என்றும், நாடு முழுவதும் கடல்சார் பற்றிய படிப்புக்கு 150 கல்லூரிகள் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 15 கல்லூரிகள் செயல்படுவதாக கேப்டன் எஸ் பரத்வாஜ் தெரிவித்தார்.

கடல்சார் தினம் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை சென்னை துறைமுக பொறுப்புக் கழக‌ம் அருகில் உள்ள சி பெரர்ஸ் கிளப்பில் நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil