தமிழகத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி மையங்களின் பெயர்ப் பட்டியல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையமான dtert.tn.nic.in தளத்தில், ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, 30 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களும், 43 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி மையங்களும், 659 தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.