Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை நிறைவு!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (13:43 IST)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
 
இதனிடையே தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments