Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் மக்களவை தேர்தல் 2019 | Karur Lok Sabha Election 2019

கரூர்  மக்களவை தேர்தல் 2019 | Karur Lok Sabha Election 2019
, சனி, 11 மே 2019 (10:05 IST)

Tamil Nadu (1/39)

Party Lead/Won Change
img NDA 1 --
img UPA 37 --
img Others 0 --
 
முக்கிய வேட்பாளர்கள் :-  தம்பிதுரை      ( அதிமுக)  vs ஜோதிமணி (காங்கிரஸ்)        

               
கரூர்  தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. 
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  81 % மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 1717248,  இதில் வாக்காளர்கள் 13,65,802 உள்ளனர்.  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  6,69,115,  பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  6,96,623ஆகும். 
 
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸை சேர்ந்த  ஜோதிமணி, அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே எம் தம்பிதுரை,  அஇஅதிமுக சார்பில்  போட்டியிட்டு தற்போது எம்.பியாக உள்ளார்.  கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட  திமுக கட்சி வேட்பாளர்,  எம். சின்னசாமியை 1,95,247 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Tamil Nadu (1/39)

Party Lead/Won Change
img NDA 1 --
img UPA 37 --
img Others 0 --
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு மழையே கிடையாதா..? குண்டுதூக்கி போட்ட வானிலை மையம்!