நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் தேசிய அளவிலான முடிவுகள் உடனுக்குடன் இந்த செய்திச்சரத்தில் அறிந்து கொள்ளலாம்.
------------------
மேடக் தொகுதி டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் வெற்றி
பெங்களூர் வடக்கு சதானந்த கவுடா வெற்றி
-------------------
ஹசனில் தேவகவுடா வெற்றி!
ஷிமோகாவில் எடியூரப்பா வெற்றி!
திருவனந்தபுரத்தில் சசி தரூர் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
-------------------
சீமாந்திராவில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
சீமாந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
-------------------
உ.பி.யில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தவிர அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் படுதோல்வி!
ரேபரேலியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
------------------
வெற்றி நிலவரம்!
பாஜக கூட்டணி - 43
காங். கூட்டணி - 5
மற்றவை - 12
-----------------
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
----------------
காசியாபாத்தில் பாஜக வேட்பாளர் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் வெற்றி பெற்றுள்ளார்.
சுல்தான்பூர் பாஜக வேட்பாளர் வருண் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
-----------------
முன்னிலை நிலவரம்
பாஜக கூட்டணி - 336
காங்கிரஸ் கூட்டணி - 62
மற்றவை - 144
-----------------
வதோதரா தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-----------------
விதிஷா தொகுதியில் சுஸ்மா சுவராஜ் முன்னிலை.
உத்தம்பூர் தொகுதியில் குலாம் நபி ஆசாத் முன்னிலை.
அசம்கர் தொகுதியில் முலாயம் சிங் யாதவ் முன்னிலை.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை.
சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத் முன்னிலை.
மும்பை வடகிழக்கு ஆம் ஆத்மி சார்பாக போட்டியிட்ட மேதா பட்கருக்கு பின்னடைவு.
புதுடெல்லியில் அஜய் மக்கானுக்கு பின்னடைவு.
பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங்கிற்கு பின்னடைவு.
ஹாஜித்பூர் தொகுதியில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் முன்னிலை.
சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி முன்னிலை.
பாட்னாசாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா முன்னிலை.
-----------------
உபியில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பாஜக முன்னிலை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 65 தொகுதிகளில் பாஜக முன்னிலை. காங்கிரஸ் 2 இடம் மட்டுமே முன்னிலை. ராகுல், சோனியாவை தவிர.
-------------------
முன்னிலை நிலவரம்
பாஜக கூட்டணி - 317
காங்கிரஸ் கூட்டணி - 69
மற்றவை - 154
கெஜ்ரிவால் தலைைமயிலான ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
-------------------
பாஜக மூத்த தலைவர் அத்வானி வெற்றி!
ராஜஸ்தானில் பாஜக போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
-------------------
வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி!
குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை.
-------------------
ஜம்மு காஷ்மீர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவிற்கு பின்னடைவு.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாஜகவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக நின்ற ஜஸ்வந்த் சிங் முன்னிலை.
அமேதி தொகுதியில் முதல் சுற்று நிலவரப்படி ராகுல் காந்தி 19,720 வாக்குகள், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 17,808 வாக்குகள். ராகுல் காந்தி 1912 வாக்குகள் முன்னிலை.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லிக்கு அமிர்தசரஸ் தொகுதியில் பின்னடைவு.
வதோதரா தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 1,70,000 வாக்குகள் முன்னிலை.
டெல்லியில் பாஜக வேட்பாளர்கள் 7 தொகுதியிலும் முன்னிலை.
முன்னிலை நிலவரம்
பாஜக - 282
காங். - 80
மற்றவை - 135
முன்னிலை நிலவரம்
பாஜக - 249
காங். - 70
மற்றவை - 111
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு.
முன்னிலை நிலவரம்
பாஜக - 171
காங். - 64
மற்றவை - 77
சுல்தான்பூரில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முன்னிலை.
காசியாபாத்தில் விகே சிங் பின்னடைவு.
பல்பூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் முகமது கைய்ஃப் முன்னிலை வகிக்கிறார்.
நான்தெட் தொகுதியில் அசோக் சவான் முன்னிலை.
மதுராவில் ஹேமமாலினி முன்னிலை.
முன்னிலை நிலவரம்
பாஜக - 117
காங். - 52
மற்றவை - 43
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 2வது இடத்தில் உள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹசனில் முன்னாள் பிரதமர் தேவே கெளடா முன்னிலை.
லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலை.
கேரளாவில் இடதுசாரிகள் 8 இடங்களிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் முன்னிலை.
உபி, மபி, சட்டீஸ்கரில் பாஜக முன்னிலை.
டெல்லியில் கபில் சிபலிற்கு பின்னடைவு.
வாரணாசி, வதோதராவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை.
அமேதியில் ராகுல் காந்தி முன்னிலை.
ரேபரேலியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலை.
மீரட் தொகுதியில் நக்மா முன்னிலை.
பிலிப்பி தொகுதியில் மேனகா காந்திக்கு பின்னடைவு.
பாஜக மூத்த தலைவர் அத்வானி காந்திநகர் தொகுதியில் முன்னிலை.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.
கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை.
குஜராத், மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை.
ஒடிசாவில் காங்கிரஸ், பாஜக சமநிலை.
மராட்டியத்தில் காங்கிரஸ் முன்னிலை.
முன்னிலை நிலவரம்
பாஜக - 58
காங். - 31
மற்றவை - 26
மத்தியப் பிரதேசம் ஜான்சியில் பாஜக வேட்பாளர் உமா பாரதி முன்னிலை.
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை.
காசியாபாத்தில் பாஜக வேட்பாளர் முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் முன்னிலை.
முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி
பாஜக - 40
காங். - 20
மற்றவை - 15