Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி

Advertiesment
தமிழகம்
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
 
FILE

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பாமக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக மருத்துவர் ராமதாசின் மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவித்தார். மேலும், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil