`மிர்ச்சி ஃப்ரெஷ்ஷர் 2009' விருதுகள்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (19:46 IST)
தனியார் பண்பலை வரிசை ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ மிர்ச்சி, இந்த ஆண்டிற்கான மிர்ச்சி ஃப்ரெஷ்ஷர்ஸ் விருதுகளை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு, பரிசுகளை வழங்கியது.கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, இளம் மற்றும் திறமையுடையோர் தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.விருது வழங்கும் விழாவில் நடிகர் அருண் விஜய், இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்ப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இளைய சமுதாயத்தினரில் திறமையுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் விராஜ், ஜி.எஸ்.எஸ். ஜெயின் கல்லூரியின் சுப்ரியா முதல் 2 வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.இருவருக்கும் சான்றிதழும், ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும், பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.