தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப மையத்தின் முதல் நிகழ்ச்சியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தினை மின்ஊடகத் தொலைத்தொடர்பு வாயிலாகத் முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கே.கணேசன், தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் பி.டபிள்யூசி டேவிதார், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில் நுட்ப மையத்தின் தலைவர் மற்றும் சி.டி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், டி.சி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜெயராம கிருஷ்ணன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் சி.கே.ரங்கநாதன், டெமையன்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டி.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.