Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.பார்ம், நர்சிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்

Advertiesment
பிபார்ம்
சென்னை: , திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (17:06 IST)
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.பார்ம், பிசியோதெரபி மற்றும் நர்சிங் படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 103 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள், 125 தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 403 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை உள்ளன.

இதேபோல 2 அரசு கல்லூரியில் ஆயிரத்து 133 பி.பார்ம் இடங்கள் மற்றும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 177 இடங்கள் உள்ளன.

பிசியோதெரபியில், 2 அரசு கல்லூரியில் உள்ள 50 இடங்கள், 25 தனியார் கல்லூரியில் உள்ள 765 இடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 705 இடங்கள் உள்ளன.

இதற்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. வரும் 22ம்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதன்மூலம் மொத்தம் 5 ஆயிரத்து 700 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil