பி.எட். மற்றும் இதர ஆசிரியிர் பயிற்சித் திட்டங்களுக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட பணியில் ஆசிரியர் கல்விக்கான தேசிய கூட்டமைப்பு (என்.சி.டி.இ.) ஈடுபட்டுள்ளது.
மக்களவையில் இதனை எழுத்துப்பூர்வமாக தெரிவித்த மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தீஸ்வரி, ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களையும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் என்.சி.டி.இ. தொடர்ந்து கண்காணித்து வருவதாக புரந்தீஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.