Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தரப் பட்டியலுக்குத் தகுதி பெறாத இந்திய பல்கலைகள்

தரப் பட்டியலுக்குத் தகுதி பெறாத இந்திய பல்கலைகள்
, சனி, 8 அக்டோபர் 2011 (17:53 IST)
FILE
கல்வியில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் உலக அளவில் சிறந்து விளங்கும் 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக் கழகம் ஒன்று கூட தகுதி பெறவில்லை என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.

டெல்லியி்ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அமர்த்தியா சென், அந்தப் பட்டியலில் சீன நாட்டின் 10 பல்கலைக் கழகங்களும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான தைவானின் இரண்டு பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

“நமது கல்வித் திறன் குறித்து நாம் பெருமையாக பேசிக்கொள்கிறோம், ஆனால் உலக அளவில் நமது பல்கலைக் கழகங்களின் பிரதிநிதித்துவம் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு குறைவாக உள்ளது. முதன்மையான 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் நமது நாட்டின் ஒரு பல்கலைக் கழகம் கூட இல்லை. சீனாவின் 10 பல்கலைக் கழகங்களும், தைவானின் இரண்டு பல்கலைக் கழகங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன” என்று கூறிய அமர்த்தியா சென், “நாம் பெருமையாக பேசிக்கொள்ளும் இந்திய தொழிற்கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), இந்திய வணிகப் பள்ளிகளும் கூட அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

டைம்ஸ் எனும் ஆங்கில இதழ் நடத்திய தரமான பல்கலைக் கழகங்கள் ஆய்வில் தேர்வான 200 பல்கலைகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டிய அமர்த்தியா சென் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil