ஜிப்மர் நர்சிங் பட்டப்படிப்பில் சேர 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் நேற்று நுழைவுத்தேர்வு எழுதியதாக ஜிப்மர் செய்தித் தொடர்பாளர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நர்சிங் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஜிப்மர் வளாகம் மற்றும் விவேகானந்தா பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த இரண்டு இடங்களிலும் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடைபெற்றதாகவும், அரசு ஒதுக்கீட்டின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் ராஜேந்திரன் கூறினார்.