Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை பல்கலையில் மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய தடையில்லை

Advertiesment
சென்னை பல்கலை
சென்னை , புதன், 21 அக்டோபர் 2009 (13:44 IST)
சென்னைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் உள்ளிட்ட நவீன ஆடைகளை அணிந்து வருவதற்கு தடையில்லை என பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வகுப்புக்கு செல்வதில் தவறில்லை என்பது எனது கருத்து. சில பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் கூட ஜீன்ஸ் அணிகிறார்கள்.

டி-ஷர்ட்டுகள் 100, 150 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் சில உடைகளை எடுத்து அதனை தைத்து உடுத்துவதற்கு அதிகம் செல்வாகும். எனவே, ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு நான் தடைவிதிக்க மாட்டேன். தேவையில்லாத வாசகங்கள் இடம் பெறும் டி-சர்ட்டுகள் அணிவதை தவிர்த்து, வாசகம் இடம் பெறாத டி-ஷர்ட்டுகள் அணியலாம்.

தமிழக பாரம்பரிய கலாசாரம் சிறப்பு வாய்ந்தது. அதற்கு எந்த குறைபாடும் ஏற்படாத விதத்தில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் ஆடை அணிய வேண்டும்.

செல்போனுக்கும் தடையில்லை: செல்போன் இன்று அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது. எனவே, மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் செல்போன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வகுப்பறையில் அதை பயன்படுத்தக்கூடாது என துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil