Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அமல்: தங்கம் தென்னரசு

Advertiesment
சமச்சீர் கல்வி
சென்னை , வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (15:08 IST)
தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சென்னை கோட்டையில் இன்று நடந்தது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2010ஆம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. இதற்கான பாடத்திட்டம், புத்தகம் தயாரிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அக்டோபர் மாதத்தில் இதற்கான பாடத்திட்டம் உருவாகும். ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி பாட புத்தகம் வரும் 2010 ஜுன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். அரசு பாடநூல் நிறுவனம் இந்த புத்தகங்களை அச்சிட்டு வழங்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil