புதிதாக அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி ஐஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,500 பேராசிரியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐஐடி, ஐஐஎம்) ஆசிரியர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் பதவி உயர்வு, திறமை அடிப்படையிலான ஊக்கத் தொகை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவை வழக்கத்திற்கு மாறாகவும், ஐஐடி ஆசிரியர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக ஐ.ஐ.டி. ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.தேன்மொழி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.