அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் முறையை மேலும் எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தயாரித்துள்ள தகவல் தொடர்பியல் தொழில் நுட்பத்திற்கான (Information Communication Technology-ICT) தேசியக் கொள்கையில், ஸ்கிரீன் ரீடர் மற்றும் பிரெய்லி பிரிண்டர் உட்பட தகவல் தொடர்பியல் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் மென்பொருட்களை பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உடல் ஊனமுற்ற மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் நவீனமயம் ஆக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வி கற்கும் திறனையும் உயர்த்த முடியும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.