Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

MBA, B.Ed. நுழைவுத் தேர்வு: IGNOU இணையதளத்தில் ஹால் டிக்கெட்

Advertiesment
நுழைவுத் தேர்வு
சென்னை , புதன், 12 ஆகஸ்ட் 2009 (16:11 IST)
இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU-இக்னோ) MBA, B.Ed. படிப்புகளுக்கு விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள், அதன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இக்னோவில் MBA, B.Ed. படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு உள்ளது. எனினும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் ignou.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இக்னோவின் கல்வி மையங்களை அணுகவும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil