Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IAS, IPS நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க நவ.22 கடைசி

Advertiesment
நுழைவுத்தேர்வு
சென்னை , வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (13:34 IST)
இந்திய ஆட்சிப் பணி, காவல் மற்றும் மத்தியக் குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வு எழுத, முழு நேரம் மற்றும் பகுதி நேரம் பயிற்சி வகுப்புகள் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பினைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்து 21 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நுழைவுத்தேர்வில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். விண்ணப்பத்தை, “முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நகர், சென்னை-40” என்ற முகவரிக்கு வரும் 22ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil