Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18% த.தொ.மாணவர்களுக்கு பணிக்கு தகுதியானவர்கள்: ஆய்வில் முடிவு

Advertiesment
தகவல் தொழில்நுட்பக் கல்வி பணிகளுக்கு உரிய திறன் ஆஸ்பயரிங் மைண்ட்ஸ் ததொ பொறியில் மற்றும் எம்சிஏ ஆஸ்பயரிங் மைண்ட்ஸ்
, புதன், 18 ஆகஸ்ட் 2010 (14:49 IST)
தகவல் தொழில்நுட்பக் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே த.தொ.நிறுவனப் பணிகளுக்கு உரிய திறனை பெற்றவர்களாக உள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்பயரிங் மைண்ட்ஸ் எனும் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. த.தொ. பொறியில் மற்றும் எம்சிஏ பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் 40,000 மாணவர்களிடம் இந்த கணினி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பேசுவது, கணக்கு, சிக்கலுக்குத் தீர்வு காணல், கணினி அறிவியல், மென்பொருள் உருவாக்கத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வைக்கப்பட்ட தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் பெற்ற மதிப்பீட்டின்படி, இவர்களில் 17.84 விழுக்காடினரே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் முழுத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர் என்றும், மற்றவர்கள் அத்தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil