Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறியியல் சேர்க்கையில் சென்னை முதலிடம்

Advertiesment
பொறியியல் சேர்க்கை சென்னை முதலிடம்
சென்னை: , திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (16:55 IST)
தமிழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையில் சென்னை நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 440 அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி பொயிறியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மூலம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 102 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன. கவுன்சிலிங் மூலம் 83 ஆயிரத்து 552 இடங்கள் (73.23 சதவீதம்) நிரம்பியுள்ளன.

சென்னையில் உள்ள 6 கல்லூரிகளில் ஆயிரத்து 990 இடங்கள் உள்ளன. இதில் மொத்த இடங்களில் 99.95 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. கவுன்சிலிங்கில் விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரத்து 120 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்ற மாவட்டங்களை விட சென்னை மாணவர்களே அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 6,539 மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அடுத்ததாக கோவையை சேர்ந்த 4 ஆயிரத்து 798 மாணவர்களும், சேலத்தை சேர்ந்த 4 ஆயிரத்து 172 மாணவர்களும், வேலூரை சேர்ந்த 4 ஆயிரத்து 172 மாணவர்களும் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.

கோவையில் 54 கல்லூரிகளும், திருவள்ளூரில் 38 கல்லூரிகளும், நாமக்கலில் 30 கல்லூரிகளும், கன்னியாகுமரியில் 25 கல்லூரிகளும், திருச்சியில் 23 கல்லூரிகளும் உள்ளன.

கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71 பொறியியல் கல்லூரிகளில் 19 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இதில் 79.16 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

தர்மபுரி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil