அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி பி.எட். கல்லூரி மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் tnteu.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பி.எட். தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மதிப்பெண் பட்டியல்கள் இம்மாத இறுதியில் கல்லூரிகளுக்கு சென்றுவிடும்.
எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.