பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் 26, 27ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
பிரான்ஸின் ‘கேம்பஸ் பிரான்ஸ்’ என்ற அமைப்பு இந்திய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த தேர்வு வரும் 26, 27ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வை நடத்துகின்றன. தேர்வின் போது பிரான்ஸ் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி உதவித்தொகை, விசா நடைமுறைகள் போன்றவைகள் குறித்து விளக்கப்படும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20ம் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு கல்வி ஆலோசகர், அலையன்ஸ் பிராங்கைஸ், 24-கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6 என்ற முகவரி அல்லது 044-42028773 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.