Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு மையங்கள் அறிவிப்பு

Advertiesment
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு
சென்னை , புதன், 19 ஆகஸ்ட் 2009 (15:49 IST)
தனித்தேர்வர்களுக்கான 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதா‌ல் சென்னை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகளுக்கான மண்டலத் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு அக்டோபர் 2009 தேர்வு தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அம்பத்தூர், செங்குன்றம், பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், ராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையத்தை தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் (EXAMINATION CENTRE) என்ற இடத்தில் பெரிய எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். அருகில் உள்ள இடத்தைத் தேர்வு செய்து, வீண் சிரமத்தைத் தவிர்க்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil