Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின்னக் குறிப்புகள்

தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின்னக் குறிப்புகள்
, வெள்ளி, 9 மார்ச் 2012 (16:16 IST)
தேர்வுகாலம் நெருங்கிவிட்டால், மாணவர்களை விரட்டும் பயமும் கூடவே வந்து தொற்றிக்கொள்ளும். தேர்வுகால பயத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும் அதனைத் தடுக்க முடியும்ம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அது என்ன என்று அறிந்துகொள்ளும் உங்கள் ஆர்வத்திற்கு பதிலாக அமையும் சின்ன சின்ன குறிப்புகள் இதோ!

உங்கள் உபயோகத்திற்கு தேர்வு அட்டவணையை உருவாக்கிக்கொள்வதற்கு காலம் தாழ்த்த வேண்டாம். தேர்விற்கு முன்னரே அதை தயார்படுத்திக் கொள்வது உங்களுக்குள் ஒரு தனித்தன்மையை உண்டாக்கும்.

வழக்கமான உங்கள் பொழுதுபோக்குகளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவிட மறக்க வேண்டாம். அது தேர்வு குறித்த உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகமளிக்கும்.

தேர்வு நெருங்கும் சமயங்களில் ஒரே நாளில் அதிகமாக படித்து முடித்துவிட வேண்டும் என்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டாம்.

மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் சமயங்களில் படிக்க திட்டமிட வேண்டுமே தவிர, இரவு உறக்கத்தைப் புறக்கணித்துவிட்டு மனதையும் உடலையும் களைப்படைய செய்யக்கூடாது.

புரதம் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும்.

அதிக அளவு தண்ணீரும், சத்தான உணவும், உடற்பயிற்சியும் கூடுதல் மன பலத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையைப் போக்கும்.

குழுவாக சேர்ந்து திட்டமிட்டு படிக்கும்போது, பாடம் தொடர்பான கருத்துகளை எளிதில் பகிரவும், அறிந்துகொள்ளவும் முடியும்.

தேர்வு பயத்தைப் போக்குவது தொடர்பான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதும், உங்களுக்குப் பிடித்த ஆசிரியரின் அறிவுரையின்படி நடப்பதும் சிறப்பானது.

Summary : Tips to avoid exam fear, how to handle exam fear

Share this Story:

Follow Webdunia tamil