Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் மருத்துவக் கல்வி: கருணாநிதி அறிவிப்பு

Advertiesment
தமிழில் பொறியல் கல்வி தமிழில் மருத்துவக் தமிழக முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
, திங்கள், 28 ஜூன் 2010 (17:42 IST)
FILE
இந்த ஆண்டு தமிழில் பொறியல் கல்வி அறிமுகப்படுத்தியப் பிறகு, அடுத்தபடியாக தமிழில் மருத்துவக் கல்வியும் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிவுற்ற நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, “இந்த ஆண்டிலிருந்து தமிழில் பொறியியல் கல்வி துவங்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். அடுத்தபடியாக தமிழிலேயே மருத்துவக் கல்வியும் அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறினார்.

அண்ணா பல்கலைக் கழகத்திலும், அதன் அங்கமாகவுள்ள 15 பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு இள நிலை கட்டுமான பொறியியல் படிப்பும், இயந்திரப் பொறியியல் படிப்பும் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil