Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க தடை

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க தடை
மதுரை , செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:35 IST)
தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்றக் ‌கிளை தடை‌வி‌தி‌த்து‌ள்ளது.

குமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் தலைவர், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் தாக்கல் செய்த மனு‌வி‌ல், எங்கள் கல்லூரி அரசு உதவி பெறாத மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனம். இதில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, 50 இடங்களை அரசு ஒதுக்கீடாகவும், மீதமுள்ள 50 இடங்களை கல்லூரி நிர்வாக ஒதுக்கீடாகவும் நிரப்பப்படுகின்றன. கடந்த 2008-09 கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான 50 மாணவர்களில் 43 மாணவர்கள் சேர்ந்தனர். மாணவர்கள் சேராததால், மீதியுள்ள 7 இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பினோம்.

இந்நிலையில், 2009-2010 கல்வி ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை 43 ஆகக் குறைத்தும், அரசு ஒதுக்கீட்டு இடங்களை 57ஆக உயர்த்தியும், இந்திய மருத்துவக் கவுன்சில் ஜூலை 23ஆம் தேதி உத்தரவிட்டது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று கூறப்பட்டிருந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு 4 வாரம் தடைவிதித்து உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil