ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு திருச்சியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு, கடந்த 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கி 18ஆம் தேதி முடிந்தது. முதல் கட்ட கலந்தாய்வில் 21,595 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 13 ஆயிரம் பேர் இடஒதுக்கீடு பெற்றனர்.
இதையடுத்து அறிவியல் பிரிவில் 5,967, கலைப் பிரிவில் 2,031, தொழிற்கல்வி பிரிவில் 1,988 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கு 2ஆம் கட்டமாக 24, 25 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது.
கலைப் பிரிவு மாணவர்களுக்கு திருச்சி பிராட்டியூர், ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், தொழிற்கல்வி பிரிவுக்கு திருச்சி நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் கலந்தாய்வு நடைபெறுகிறது ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.