Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்விக் கண்காட்சி

சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்விக் கண்காட்சி
சென்னை , திங்கள், 1 பிப்ரவரி 2010 (18:16 IST)
நாட்டின் முக்கிய நகரங்களில் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 4, 5ஆம் தேதிகளில் சென்னையில் கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் இங்கிலாந்து கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 58 பிரதிநிதிகள் உட்பட 90க்கும் அதிகமான அயல்நாட்டுக் கல்லூரி பிரதிநிதிகளையும், அவர்கள் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்விமுறை, படிப்பு வாய்ப்புகள், உதவித்தொகை, விசா பெறும் முறை ஆகியவை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்தக் கல்விக் கண்காட்சிக்கு தங்கள் கல்லூரி, பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்து வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் 044 - 4205 0600 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உரிய அனுமதியைப் பெறலாம் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறும் என சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil