சமச்சீர் கல்விக்கான பொது வரைவுப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதன் முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வரைவு பொதுப் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது.
இப்போது மேற்கண்ட பாடங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்து பள்ளிக்கல்வி இணையதளத்தில் (pallilkalvi.in) வெளியிடப்பட்டுள்ளது.