Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்: தமிழகத்தைச் சேர்ந்த98 பேர் தேர்ச்சி

Advertiesment
மத்திய அரசுப் பணியாளர் தேர்வகம்
, புதன், 11 மே 2011 (18:58 IST)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வகம் நடத்திய இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவ, மாணவியர் முதல் 10 இடங்களில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி முதலிடத்தில் தேர்வாகியுள்ளார்.

2011ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2,589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்வி பயின்ற பட்டதாரி திவ்யதர்ஷினி முதலிடத்தை வென்றுள்ளார். சைதை சா.துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் இலவச கல்வி பயிற்சியில் பயின்ற ஆர்.வி.வருண்குமார் 3வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
FILE

நெல்லையைச் சேர்ந்த அபிராமி சங்கரன் 7வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த மற்றொரு மாணவரான எம்.அரவிந்த் 8வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆக முதல் 10 இடங்களில் வென்ற மாணவர்களில் இருவர் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 98 பேர் தேச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 36 பேர் ஆவர். இவர்களில் 29 பேர் மாணவர்கள், 7 பேர் மாணவிகள்.

இவர்களில் ஆர்.ராகப்பிரியா 28வது இடத்திலும், மீர் முகமது 59வது இடத்திலும், எஸ்.கார்த்திகேயன் 118வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.சீனிவாசன் என்ற மாணவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகத்தைச் சேர்ந்த அவினாஷ் கே.நிலாங்கர், சி.பிரபாகர் ஆகிய மாணவர்கள் மனிதநேயத்தில் பயிற்சி பெற்றுத் தேர்வாகியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு 85 பேரும், வன பணிக்கு 12 பேரும் தேர்வாகி, பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகவே பயிற்சியும், அவர்கள் தேர்வு எதிர்கொள்ளும்போது தேவைப்படும் அனைத்து வசதிகளும் மனித நேய அறக்கட்டளையால் செய்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil