Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இக்னோ பல்கலை. விண்ணப்பத் தேதி நீட்டிப்பு

Advertiesment
இந்திரா காந்தி பல்கலைகழகம்
சென்னை , செவ்வாய், 21 ஜூலை 2009 (11:23 IST)
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பல்வேறு படிப்புகளுக்கும், காலதாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்கும் தேதி வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலதாமத கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் எ‌ன்று‌ம் விண்ணப்பிக்க விரும் புபவர்கள் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக மண்டல மையங்கள் மற்றும் படிப்பு மையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று‌ம் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை‌க்கழக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மேலு‌ம் ignou.ac.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.





Share this Story:

Follow Webdunia tamil