Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமா?

ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமா?
, வெள்ளி, 9 மார்ச் 2012 (14:52 IST)
பொதுவாகவே ஆங்கில தேர்வுத் தாளில் அதிக மதிப்பெண் எடுப்பது என்பது சுலபமான விஷயமல்ல. அதற்கு முதலில் தேர்வுத் தாளை திருத்தும் ஆசிரியரை கவரும் வகையில் தேர்வுத் தாள் இருக்க வேண்டும். தேர்வுத் தாளை சிறந்த முறையில் வழங்குவதற்கானச் சில குறிப்புகள்.

முதலில் நமக்கு மிகவும் நன்றாக தெரிந்த கேள்விக்கானப் பதிலை எழுதத் தொடங்க வேண்டும், இது ஆசிரியருக்கு உங்கள் திறன் மற்றும் தேர்வுத் தாள் பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.

*நமக்கு மதிப்பெண்களைக் கூட்டுவது 1 மார்க் கேள்விகள் தான், ஆகையால் உங்கள் கவனத்தை இதில் செலுத்தவும், கடைசி நேரங்களில் நமக்கு படபடப்பு ஏற்படுவதால் 1 மார்க் கேள்விகளில் கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு.

*ஆங்கில கட்டுரைகளை எழுதும்போது, ஒரு சிலவற்றை பின்பற்றினால் கூடுதல் மதிபெண் எடுக்கலாம், கட்டுரையைத் தொடங்கும்முன்

-கட்டுரைத் தலைப்பு ( Title)
-கட்டுரை ஆசிரியர் பெயர் (Author name)
-உள்ளடக்கம் (Synopsis)
-உள்ளடக்கத்திற்குள் அடங்கும் தலைப்புகள் (Subtitles )

போன்றவறை முன்னிட்டுக் காட்டவும்.

* கட்டுரையின் தலைப்பு அப்பத்தியில் நீங்கள் கூறும் செய்தியை உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும்.

* கட்டுரை நடுவில் நீங்கள் அந்த பத்தியில் கூற விரும்பும் செய்திகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுத முயற்சிக்கவும்.

* பத்தியின் நடுவில் சில குறியீடுகளை வண்ண நிறத்தால் மிகைப்படுத்திக் காட்டவும். அது செய்யுள்(Poem) பகுதி என்றால் அதில் இடம்பெறும் வரிகளை பத்தியில் சேர்க்கவும்.

* மேலும் வண்ண நிற பேனாக்களைப் பயன்படுத்தும் போது தலைப்புகள், துணைத் தலைப்புகள், கேள்வி எண்கள் போன்றவற்றை குறிப்பிட தனித்தனிப் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.

தேர்வில் அதிக மதிபெண்கள் பெற வாழ்த்துகள்...!

English Summary

How to Score High Marks in English Subject?. To Score high marks in English in any exam is not an easy task, so here is some tips to achieve it. Tips for Students for scoring high marks in the English Examination.

Share this Story:

Follow Webdunia tamil