Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயல்நாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: வயலார் ரவி

Advertiesment
அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள்
புதுடெல்லி , வெள்ளி, 24 ஜூலை 2009 (10:48 IST)
அயல்நாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு இந்தியாவில் உயர்கல்வி அளிக்கவும், உயர்கல்விக்கான இடமாக இந்தியாவை மேம்படுத்தவும் 2006-07ம் கல்வியாண்டில் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பொறியியல், தொழில்நுட்பம், கலை, வணிகம், மேலாண்மை, விடுதி நிர்வாகம், விவசாயம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை படிப்புகளுக்கு, அதிகபட்சமாக ஆண்டுதோறும் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை சுமார் 100 வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எட்சில் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கடந்த 2006-07ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 60 பேரும், கடந்த 2007-08ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 79 பேரும், கடந்த 2008-09ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 67 பேரும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர் என வயலார் ரவி தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil