அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மாதிரி சமுதாய கல்லூரியில் பயன்பாட்டில் உள்ள சில கல்வி முறைகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மாதிரி கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடந்த பயிலரங்கத்தில் இதனைத் தெரிவித்த இக்னோ துணைவேந்தர் லதா பிள்ளை, “அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க மாதிரி கல்லூரிகளில் உள்ள கல்வி முறைகள் பற்றி ஆய்வு நடத்தப்படும். இதில் இந்திய கல்விக்கு ஏற்ற வகையில் உள்ள கல்வி முறைகள் இக்னோர் மாதிரி கல்லூரிகளில் புகுத்தப்படும்” என்றார்.