Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேஷன் துறையில் குறுகிய கால படிப்புகள்

Advertiesment
ஃபேஷன்
சென்னை , செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (12:09 IST)
சென்னையில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் தற்போது ஓராண்டு, 6 மாதங்கள் மற்றும் 3 மாத கால பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

ஃபேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பம், ஃபேஷன் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, ஆடை ஏற்றுமதி வர்த்தக நிர்வாகம், ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஓராண்டு படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.

இதேபோல் கம்ப்யூட்டர் மூலம் காலணி வடிவமைப்பு, தோல் பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 மாத காலப் படிப்புகளும், கம்ப்யூட்டர் உதவியுடன் மாதிரி உருவாக்குதல், சில்லரை வணிக மைய வடிவமைப்பு, கம்ப்யூட்டர் உதவியுடன் ஆடை மற்றும் ஹோம் ஃபேஷன் வடிவமைப்பு, பிரிண்டிங் டிசைன் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பு உள்ளிட்ட 3 மாத கால பகுதி நேர படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் கல்வித்துறையில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நேரில் ரூ. 100-க்கான வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும். தபாலில் பெற ரூ.150-க்கான வரைவோலையை (தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் பெயரில், சென்னையில் செலுத்தத்தக்கது) அனுப்பி விண்ணப்பங்களை பெறவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -2254 2755 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil