Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாய் கடி: என்ன செய்யனும்? என்னென்ன சாப்பிடக்கூடாது?

நாய் கடி: என்ன செய்யனும்? என்னென்ன சாப்பிடக்கூடாது?
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (10:45 IST)
நாய் கடித்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி  என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்...


கடந்த சில காலமாக நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்களும், தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பல பகுதிகளில் தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் மக்களை நாய்கள் தாக்கு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியமானது ஆகும்.
ALSO READ: வெறித்தனமாய் துரத்தி வந்த நாய்கள்; நூல் இழையில் தப்பித்த சிறுவர்கள்!
அந்த வகையில் நாய் கடித்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி  என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்…
  1. நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள்.
  2. கடிபட்ட இடத்தில் குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், அதாவது இரத்த, வெளியேறும் வரை கழுவுங்கள். (கழுவுவதற்கு ஆக்கஹால் செட்ரி மைடு கார்பாலிக் அமிலம் அல்லது சோப் உபயோகிக்கலாம்)
  3. நாய் கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
  4. சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றை தடவக்கூடாது.
  5. பின்னர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மட்டுமே உயிர் காக்கும்.
  6. நாய் கடித்த நாளான்று தடுப்பூசி போடுவதை 0 நாள் என்பர், பின்னர் 3, 7, 14, 28 என முறையே நாட்களை கணக்கிட்டு தடுப்பூசியை ஐந்து முறை செலுத்திக்கொள்ள வேண்டும்.
 நாய் கடித்தால் என்னென்ன உணவை தவிக்கனும்?
நாய் கடித்தால் பால், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், தக்காளி, மீன், கோழி, ஆடு ஆகிய இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்; இந்தியாவில் கொரோனா நிலவரம்!