Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து நோய்களையும் விரட்டி அடிக்கும் துளசி !!

Advertiesment
அனைத்து நோய்களையும் விரட்டி அடிக்கும் துளசி !!
துளசி தமிழ் மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. “மூலிகைகளின் அரசி” எனப்படும் “துளசி”க்குதான் பிருந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

துளசி சளிக்கு நல்லது. அனைத்து காய்ச்சல்களுமே துளசிக்கு கட்டுப்படும். துளசி மற்ற தாவரங்களை விட அதிகளவில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை கிரகித்து ஆக்சிஜனை வெளியிடும் சக்தி கொண்டது.
 
தினமும் துளசி இலைகளை மென்று தின்று வந்தால் சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான நோய்கள் மற்றும் வாய்நாற்றம் போன்ற அனைத்தும் நீங்கும்.
 
துளசி இலையை எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்று போடலாம். துளசி இலை அரைத்த விழுதுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் தேமல் மறையும்.
 
துளசி இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும், கொசுக்களும், தீய சக்திகளும் அண்டாது. துளசியை செம்பு பாத்திரத்தில் போட்டு 8 மணிநேரம் ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
துளசி இலைகளை கழுவி மென்றும் சாப்பிடலாம். இதனால் பல நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ள முடியும். காற்றிலுள்ள புகையை சுத்திகரிக்கும்  தன்மையும் கொண்டது இந்த துளசி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரிழிவு பாதிப்புகளை நீக்க உதவும் நாவல் பழம்...!