Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்...?

தீபாவளி பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்...?
, சனி, 7 நவம்பர் 2020 (14:59 IST)
தீபாவளி அன்று தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி சகலவிதமான சந்தோஷங்களும்  உண்டாகும்.

தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தீபாவளி நாளில் கேதார கொளரி விரதம்  இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். 
 
வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி  வழிபாடு செய்தல் வேண்டும். 
 
மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும்  எண்ணெய்யில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் செல்வ செழிப்பு ஏற்படும்.
 
தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்கவேண்டும். 
 
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் கிடைக்கும். புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடம் வீட்டுப்  பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறப்புமிக்கது.
 
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தபிறகு புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்த சோகைக்கு எதிராக போராடும் சத்துக்களை கொண்ட ஆப்ரிகாட் !!