Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி மகோத்சவம்

ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி மகோத்சவம்

Webdunia

இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளித் திருநாள் ஆகும். நரகாசுரனை சத்யபாமா மூலமாக  கிருஷ்ணர் கொல்வதாகவும் நரகாசுரன் இறக்கும் தருவாயில் தான் இறந்த நாள் அன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி  புத்தாடைகள் அணிந்து தன் இறப்பை கொண்டாட வேண்டுமென்று வரம் பெற்றதாகவும் ஐதீகம்.

 
தீபாவளித் திருநாள் என்பது பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தன் மகன் நரகாசுரனை கொன்ற தினமாக  கொண்டாடப்படுகிறது. தன் மகனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பசுவையும் கன்றையும் சேர்த்து சத்யபாமா பூஜித்தாக  வரலாறு. நாமும் அவ்வாறு பசுவையும் கன்றையும் பூஜித்தால் நம் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
 
வட இந்தியாவில் ராம ராவண யுத்தம் முடிந்து ராமர் தசரத மன்னராக பட்டாபிஷேகம் செய்யும் நாள் என்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வட நாட்டவர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் புது கணக்கு  துவங்கி லட்சுமி பூஜை செய்வதை நாம் காணலாம். 
 
5 நாள் பண்டிகையாக தீபாவளி ஐந்து நாள் மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது, அதன் படி, 
 
1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம். 
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள். 
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் 
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம் 
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி ஸ்பெஷல் எள்ளடை அல்லது தட்டை செய்ய...!