Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் லட்சுமி குபேரன் கோயில்....

தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் லட்சுமி குபேரன் கோயில்....

தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் லட்சுமி குபேரன் கோயில்....

Webdunia

இந்தியாவிலேயே லட்சுமி குபேரரருக்கு என கோயில் உள்ளது இங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்திருப்பது லட்சுமி குபேரன் கோயில். இது 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.

 
தீபாவளி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.  தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
 
தினமும் கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
 
லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். இந்த காட்சியைப் பார்ப்பதே பரவசத்தை ஏற்படுத்தும். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை.
 
அதேப்போல கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே, இந்த கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் அளிப்பது குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். அதேப்போல திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோயிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைனீஸ் சிக்கன் பக்கோடா....